அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், பூட்டிய வீட்டுக்குள் இருந்து ரூ.1 பில்லியனுக்கும் அதிக மதிப்பிலான தங்கக்கட்டிகள், நகைகள் கைப்பற்றப்பட்டன.
இது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளன.
அகமதாபாத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சிலர் நடமாடுவதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது.
சந்தேகப் பேர்வழிகள் அங்குள்ள ஒரு வீட்டில் தங்கியிருப்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து, காவல்துறையினருடன் வருவாய் புலனாய்வுப் பிரிவினரும் தீவிரவாத தடுப்புப் படையினரும் இணைந்து அந்த குடியிருப்புப் பகுதியைச் சுற்றி வளைத்தனர்.
எனினும், அந்த குறிப்பிட்ட வீடு பூட்டப்பட்டிருந்தது. பூட்டைத் திறந்து அந்த வீட்டைச் சோதனையிட்டபோது, அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
அந்த வீட்டுக்குள் 88 கிலோ தங்கக் கட்டிகள், 19 கிலோ தங்க நகைகள், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள 11 உயர் ரக வெளிநாட்டு கடிகாரங்கள், ரூ.13.7 மில்லியன் ரொக்கம் ஆகியவை காணப்பட்டன.
“இந்த வீட்டை மேக் ஷா என்பவர் வாடகைக்கு எடுத்துத் தங்கியிருந்தது தெரிய வந்துள்ளது. அவரது தந்தை மகேந்திராஷா, துபாயில் பங்குச்சந்தை முதலீட்டாளராக உள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
“எனவே, தந்தைக்கும் மகனுக்கும் இடையே போலி நிறுவனங்கள் மூலம் நிதி பரிவர்த்தனைகள் நடந்திருக்கக்கூடும்.
இந்தக் கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறோம்,” என்று தீவிரவாத தடுப்புப் படை காவல் கண்காணிப்பாளர் சுனில் ஜோஷி தெரிவித்துள்ளார்.

