தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆண்டுதோறும் பெண்களுக்கு ரூ.30,000: தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி

1 mins read
da8cbf0f-5127-4f5f-bed1-7bb9b86537b6
முதற்கட்டத் தேர்தல் நெருங்குவதால் தீவிரத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட தேஜஸ்வி யாதவ். - படம்: இன்ஸ்டகிராம்

பாட்னா: பீகாரில் நவம்பர் 6ஆம் தேதி முதற்கட்டத் தேர்தல் நடைபெறுகிறது.

முக்கிய அரசியல் தலைவர்கள் அம்மாநிலத்தை முற்றுகையிட்டுள்ள நிலையில், முதற்கட்டத் தேர்தலுக்கான பிரசாரம் நவம்பர் 4ஆம் தேதியன்று ஒய்ந்தது.

பீகாரில் எதிர்க்கட்சிகளுக்கு வாக்களித்தால் குடும்ப ஆட்சி வரும் என இந்தியப் பிரதமர் மோடி பிரசாரம் செய்து வரும் நிலையில், பெண் வாக்காளர்களை கவர உதவித்தொகை என்ற பெயரில் ‘பிரதான் மந்திரி ரோஜ்கார் யோஜனா’ என்ற திட்டத்தின்கீழ் அவர்களின் வங்கிக்கணக்கில் ரூ.10 ஆயிரத்தை வரவு வைத்திருக்கிறது பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் அரசு.

இதற்குப் போட்டியாக ‘இண்டியா’ கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவும் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவரான தேஜஸ்வி, பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ்வின் இளைய மகன்.

அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,‘’நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆண்டுதோறும் பெண்களுக்கு ரூ.30 ஆயிரம் வழங்குவோம். அதோடு விவசாயிகளுக்கு நெல்லுக்கு குவிண்டாலுக்கு 300 ரூபாயும், கோதுமைக்கு 400 ரூபாயும் ஊக்கத் தொகையாகத் தருவோம்’’ எனக் கூறியுள்ளார்.

ஏற்கெவே எதிர்க்கட்சிகள் சார்பில் ஆட்சிக்கு வந்தவுடன் பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.2500 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

பீகார் பெண்களுக்கு நிதியுதவியை அறிவிப்பதில் ஆளும் கூட்டணியும் எதிர்க்கட்சிகளின் கூட்டணியும் போட்டிப்போடுகின்றன.

இதற்கிடையே, அரசியல் தலைவர்களின் வருகையால் பீகார் ஹோட்டல்கள் நிரம்பி வழிகின்றன.

குறிப்புச் சொற்கள்