தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அசைக்க முடியாத ஆதரவுக்கு மக்களிடம் நன்றி தெரிவித்த ஆர்எஸ்எஸ் தலைவர்

1 mins read
6ee3ee40-608c-414f-a799-889648346414
ஆர்எஸ்எஸ் அமைப்பினர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

புதுடெல்லி: ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம் நிறுவப்பட்டு நூறு ஆண்டுகள் ஆகிவிட்டன. 1825ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதியன்று அது நிறுவப்பட்டது.

இது இந்து சமய தேசியவாதிகளால் உருவாக்கப்பட்ட வலதுசாரி அமைப்பு. இந்த அமைப்பு ஆர்எஸ்எஸ் என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது.

இன்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவை ஒட்டி கொண்டாட்டம் நடைபெற இருக்கிறது. இதில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ள இருக்கிறார்.

நூற்றாண்டு நிறைவை ஒட்டி பிரதமர் மோடி நினைவு அஞ்சல்தலை மற்றும் நாணயத்தை வெளியிட்டு உரையாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நாறு ஆண்டுகளாக ஆர்எஸ்எஸ் அமைப்புக்குத் தங்கள் அசைக்க முடியாத ஆதரவைத் தந்து வரும் மக்களுக்கு அதன் தலைமைச் செயலாளர் தத்ரேயா ஹொசாபலே நன்றி தெரிவித்துக்கொண்டார்.

ஆர்எஸ்எஸ் அமைப்பு அதன் துணை அமைப்புகளுடன் சேர்ந்த இந்திய மக்களுக்கு, குறிப்பாக இளையர்கள், மகளிர், விவசாயிகளுக்குச் சேவையாற்றி வருகிறது. அவர்களுக்காகப் பல்வேறு திட்டங்களை அது நடைமுறைப்படுத்தியுள்ளது.

வெள்ளம், புயல் போன்ற இயற்கைப் பேரிடர்கள் ஏற்பட்டபோது நிவாரணப் பணிகளிலும் அது ஈடுபட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்