தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிரியங்காவை எதிர்த்து குஷ்பு என பரவிய வதந்தி

1 mins read
9405a55b-6733-4c2f-b663-c56edfd69d12
வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி (இடது) போட்டியிடுகிறார். - படம்: இந்திய ஊடகம்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதிக்கு நவம்பர் 13 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

ராகுல் காந்தி வென்ற தொகுதி என்பதால் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக அவரது சகோதரி பிரியங்கா காந்தி நிறுத்தப்பட்டு உள்ளார்.

அவரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க காங்கிரஸ் முயன்றுவரும் வேளையில் அவருக்கு எதிராக நடிகை குஷ்புவை பாஜக களமிறக்கத் திட்டமிட்டு உள்ளதாக வியாழக்கிழமை இரவு செய்தி பரவியது.

வயநாடு தொகுதிக்கான பாஜகவின் இறுதி வேட்பாளர்கள் பட்டியலில் குஷ்பு பெயர் இடம்பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியானது.

ஆனால், இதுதொடர்பாகப் பேசிய குஷ்பு, “தேர்தல் வந்தாலே இதுபோன்ற வதந்திகள் பரவுவது வழக்கம். இப்போதும் அதுபோல வதந்தி எழுகிறது,” எனக் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்