தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இல்லாத நாட்டுக்குத் தூதரகம் நடத்தி உத்தரப் பிரதேசத்தில் மோசடி

1 mins read
0b050489-2489-47db-b9fb-9a5edaba7545
மோசடியில் ஈடுபட்ட ஹர்ஷ்வர்தன் ஜெயின். - படம்: ஊடகம்

லக்னோ: இல்லாத ஒரு நாட்டிற்குத் தூதரகம் அமைத்துத் தன்னை தூதராக அறிவித்து மோசடியில் ஈடுபட்ட ஒருவரை உத்தரப் பிரதேசக் காவல்துறை கைது செய்துள்ளது.

ஹர்ஷ்வர்தன் ஜெயின் என்ற அந்த ஆடவர், காஸியாபாத்தில் ஓர் ஆடம்பரமான இரண்டு மாடிக் கட்டடத்தை வாடகைக்கு எடுத்து ‘மேற்கு ஆர்க்டிக்’ என்ற பெயரில் ஒரு தூதரக அலுவலகத்தை நடத்தி வந்துள்ளார்.

மேற்கு ஆர்க்டிக் என்பது அன்டார்டிக்காவில் உள்ள ஒரு பகுதி. அதற்கு எந்த ஒரு அனைத்துலக அங்கீகாரமும் இல்லை. அங்கு யாரும் வசிக்கவில்லை.

இதைப் பயன்படுத்தி ஹர்ஷ்வர்தன் வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபட்டார். இல்லாத இந்த நாட்டில் வேலை வழங்குவதாக இளைஞர்களை நம்ப வைத்துள்ளார்.

எந்தச் சந்தேகமும் ஏற்படாமல் இருக்க, விலையுயர்ந்த கார்கள், தூதரகக் கடப்பிதழ்கள், வெளிநாட்டு நாணயம், நாட்டின் முக்கிய தலைவர்களுடன் போலி புகைப்படங்கள் உள்ளிட்டவற்றைத் தூதரக அலுவலகத்தில் ஒட்டினார்.

அதிபர், பிரதமர் மற்றும் பிற முக்கிய தலைவர்களுடன் இருக்கும் போலி புகைப்படங்களை அவர் வைத்திருந்தார். இது தவிர, பணமோசடி நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டுள்ளதையும் காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.

அண்மையில் அவர் தூதரகப் புகைப்படங்களைச் சமூக ஊடகங்களில் பகிர்ந்ததையடுத்து, அவரது செயல்பாடுகளில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் விசாரணை நடத்தி அவரை கைது செய்தனர்.

12 கடப்பிதழ்கள், வெளியுறவுத்துறை முத்திரைகள் பதித்த கோப்புகள், 34 நாடுகளின் முத்திரைகள், ரூ.44 லட்சம் ரொக்கம் மற்றும் விலையுயர்ந்த கார்கள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

குறிப்புச் சொற்கள்