தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தெற்கு ரயில்வேக்கு ரூ 91.7 பி. வருவாய்

1 mins read
843ac0bd-f365-43a9-b122-9319d3130e01
கோப்புப் படம்: - news.railanalysis.com / இணையம்

சென்னை: இந்தியாவின் தெற்கு ரயில்வே, நடப்பு நிதியாண்டில் ரூபாய் 91.7 பில்லியன் (1.4 பில்லியன் வெள்ளி) வருவாய் ஈட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தொகை, கடந்த ஆண்டு பதிவானதைவிட ஐந்து விழுக்காடு அதிகம் என்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர். என். சிங் கூறியதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தெற்கு ரயில்வேயில்தான் 91.1 விழுக்காட்டு ரயில்கள் சரியான நேரத்தில் இயக்கப்படுவதாக அவர் சொன்னார். கடந்த ஆண்டு, அப்பாதையில் 528 மில்லியன் பேர் பயணம் செய்தனர் என்றும் இவ்வாண்டு 545 மில்லியன் பேர் பயணம் செய்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பண்டிகை, விடுமுறை நாள்களில் மக்களின் போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் 2,329 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளதாக திரு ஆர். என். சிங் தெரிவித்தார். இது, கடந்த ஆண்டு பிதிவானதில் 2.8 மடங்கு அதிகம்.

குறிப்புச் சொற்கள்