இந்தியா செல்லவுள்ள ரஷ்ய அதிபர்

இந்தியா செல்லவுள்ள ரஷ்ய அதிபர்

1 mins read
8b3b9ef2-8475-4973-867f-2194baaf83f6
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் - படம்: ராய்ட்டர்ஸ்

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவிற்கு வருகை தருமாறு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுக்கு முறைப்படி அழைப்பு விடுத்துள்ளதாக ர‌ஷ்ய அரசாங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.

திரு புட்டினின் இந்தியப் பயணத்துக்கான தேதிகள் 2025ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நிர்ணயிக்கப்படும் என்று ர‌ஷ்ய அரசாங்கம் தெரிவித்தது.

2022 பிப்ரவரியில் தொடங்கிய ரஷ்யா-உக்ரேன் போருக்குப் பிறகு ரஷ்ய அதிபர் புட்டின் இந்தியா செல்வது இதுவே முதல் முறையாகும்.

குறிப்புச் சொற்கள்