தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கர்நாடகா குகையில் வசித்த ரஷ்யப் பெண்; நாடு திரும்புவதற்கு உதவ கோரிக்கை

1 mins read
b95eee0f-7c61-4a23-8efa-23880f004a44
குகையில் தனது இரண்டு மகள்களுடன் வசித்த ரஷ்யப் பெண்ணை காவல்துறையினர் மீட்டு காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர். - படம்: தமிழக ஊடகம்

பெங்களூரு: கர்​நாடகா மாநிலம் உத்தர கன்​னடா மாவட்​டத்​தில் கோகர்ணா அரு​கே ராமதீர்த்த குகை​யில் வசித்து வந்த ரஷ்யாவைச் சேர்ந்த நினா குடினா, 40, நாடு திரும்ப உதவ வேண்டும் என்று அவரது கணவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

நினா குடினா, தனது இரண்டு மகள்களுடன் அங்கு வசித்து வந்தார். அவரது ஆவணம் தொலைந்துவிட்டதால் கடந்த ஆறு ஆண்டுகளாக சட்டவிரோதமாக தங்கியிருந்தது தெரிய வந்ததாக இந்து தமிழ் திசை தகவல் வெளியிட்டுள்ளது.

கர்​நாடக காவல்துறையினர் அவர்களை மீட்டு கடந்த ஜூலை​யில் அரசு காப்​பகத்​தில் தங்க வைத்​தனர்.

இந்த ​நிலை​யில் நினா குடி​னா​வின் கணவர் ட்ரோர் ஷலோமா கோல்ட்​ஸ்​டெ​யின் கர்​நாடக உயர் நீதி​மன்​றத்​தில் மனு ஒன்றை தாக்​கல் செய்​தார்.

அதில், “தனது மனைவி, மகள்களின் கடப்பிதழ் உள்ளிட்ட ஆவணங்​கள் காணா​மல் போய்​விட்​டன. மத்​திய அரசு இந்த விவ​காரத்​தில் உடனடி​யாக தலை​யிட்​டு, என் மனை​விக்கு உரிய ஆவணங்​களை வழங்கி, ரஷ்​யா​வுக்கு அனுப்பி வைக்க வேண்​டும்,​” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மனு மீது விசாரணை நடத்திய உயர் நீதி​மன்ற நீதிபதி பி.எம்​.ஷி​யாம் பிர​சாத் சனிக்கிழமை (செப்டம்பர் 27) தீர்ப்பளித்தார்.

“மத்​திய வெளி​யுறவு அமைச்சு, ரஷ்ய அரசுடன் பேசி நினா குடினா சொந்த நாட்​டுக்கு திரும்​புவதற்​கான நடவடிக்​கைகளை மேற்​கொள்ள வேண்​டும். வரு​கிற அக்​டோபர் 9ஆம் தேதிக்​குள் அவரும் 2 மகள்​களும் ரஷ்​யா​வுக்கு செல்​வதை மத்​திய அரசு உறு​திப்படுத்த வேண்​டும்,” என்​று நீதிபதி உத்​தர​விட்​டார்​.

குறிப்புச் சொற்கள்