சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. அதற்கேற்ப கோவிலின் வருமானமும் அதிகரித்து வருகிறது.
சன்னிதானம் திறக்கப்பட்டு 29 நாள்களில் இதுவரை ஏறத்தாழ ரூ.164 கோடி வருமானம் ஐயப்பன் கோவிலுக்கு வந்துள்ளது.
சபரிமலை கோவில் சன்னிதானம் சில வாரங்களுக்கு முன் திறக்கப்பட்டது. 29 நாள்களில் இதுவரை 22.67 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 4,51,043 பக்தர்கள் அதிகமாக தரிசனம் செய்துள்ளனர்.
இந்த ஆண்டில் இதுவரை ரூ.163.89 கோடி வருமானம் பெறப்பட்டதாகவும் இதில், பிரசாதத்தின் விற்பனை மட்டும் ரூ.82.67 கோடியைத் தொட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உண்டியல் காணிக்கையாக ரூ.52.27 கோடி கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டைவிட ரூ.22.76 கோடி அதிகமாகும்.
பிரசாத விற்பனையும் கடந்த ஆண்டைவிட ரூ.17.40 கோடி அதிகமாக நடைபெற்று உள்ளது.