சபரிமலைக் கோயிலில் நெய் விற்பனை முறைகேடு; அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு

சபரிமலைக் கோயிலில் நெய் விற்பனை முறைகேடு; அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு

2 mins read
1389a752-81cd-493a-9170-c3b2cebd5940
கோயி​லில் பக்​தர்​களுக்கு விற்​பனை செய்​யப்​பட்ட 16,628 ‘பாக்​கெட்’ நெய்​யில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படுகிறது. - படம்: இந்தியன் எக்ஸ்பிரஸ்

கொச்சி: கேரளா​வில் உள்ள சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் விற்​பனை செய்​யப்​படும் அபிஷேக நெய்​யில் நிதி முறை​கேடு நடந்​த​தாகப் புகார் எழுந்​துள்ளது.

2025ஆம் ஆண்டு நவம்​பர் 17ஆம் தேதி முதல் டிசம்​பர் 27ஆம் தேதிக்கு இடைப்​பட்ட காலத்​தில் அந்தக் குற்ற நடவடிக்கை நடந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.

அந்தக் காலகட்டத்தில் கோயி​லில் பக்​தர்​களுக்கு விற்​பனை செய்​யப்​பட்ட 16,628 ‘பாக்​கெட்’ நெய்​யில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படுகிறது. ஊழலுக்குத் திரு​வி​தாங்​கூர் தேவசம் ஊழியர்​கள் 43 பேர் உதவியதாகவும் குற்றஞ்சாட்டப்​பட்​டுள்ளது.

நெய் விற்​பனைத் தொகை திரு​வி​தாங்​கூர் தேவசம் அறக்கட்டளைக்குச் செலுத்​தப்​படவில்லை என்​றும் இதனால் ரூ.17 லட்​சத்​துக்​கும் அதி​க​மான இழப்பு ஏற்​பட்​டது என்றும் கூறப்​பட்​டது.

இதையடுத்து, திரு​வி​தாங்​கூர் தேவசம் அறக்கட்டளையின் ஊழல் தடுப்புத்துறை அளித்த புகாரின் அடிப்​படை​யில், கேரள உயர் நீதிமன்​றம் தாமாக முன்​வந்து உடனடி குற்​ற​வியல் விசாரணைக்கு உத்​தர​விட்​டது.

இந்​நிலை​யில், இந்த வழக்கு தொடர்​பான விசா​ரணை கேரள உயர் நீதி​மன்ற நீதிப​தி​கள் வி.ராஜா விஜய​ராகவன், கே.​வி. ஜெயக்​கு​மார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை (ஜூன் 11) விசா​ரணைக்கு வந்​தது.

மனுவை விசா​ரித்த நீதிப​தி​கள், “இது ஊழல் தடுப்புச் சட்​டத்தின் கீழ்வரும் குற்றமாகப் பதிவு செய்​யப்​படும். குற்றத்தை ஆராய்ந்​து, அந்த அறிக்கையை நான்கு வாரக் காலத்​திற்​குள் நீதி​மன்​றத்​தில் சமர்ப்​பிக்க வேண்​டும்.

“விசா​ரணை​யின்​போது சேகரிக்​கப்​பட்ட ஆவணங்​கள், தகவல்​களை அதி​காரி மூலம் சுதந்​திர​மாக மறு ஆய்வு செய்யவேண்​டும். இந்த விவ​காரத்தை நிர்​வாக அலட்​சி​யம் அல்​லது குறை​பாடுள்ள பதிவேடு என்ற கண்​ணோட்​டத்​தில் மட்​டுமே பார்க்கமுடி​யாது. விரி​வான விசாரணையை நடத்தி அதை அறிக்​கை​யாகத் தாக்​கல் செய்யவேண்​டும்,” என்றனர்​.

குறிப்புச் சொற்கள்