தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சுதேசிப் பொருள்களின் விற்பனை பேரளவில் அதிகரிப்பு: மோடி பெருமிதம்

1 mins read
6ac3fa59-9fa3-4242-85da-f83bd9cd02ab
மன்-கி-பாத் வானொலி நிகழ்ச்சியில் பேசினார் பிரதமர் மோடி. - கோப்புப்படம்: ஊடகம்

புதுடெல்லி: பண்டிகைக் காலத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட (சுதேசி) பொருள்களின் விற்பனை பேரளவில் அதிகரித்துள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மன்-கி-பாத் நிகழ்ச்சிக்காக வானொலியில் பேசிய அவர், ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின்போது இந்தியாவின் வெற்றி மக்களைப் பெருமை அடையச் செய்துள்ளது என்று குறிப்பிட்டார்.

நாடு முழுவதும் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட்டதாகவும் ஒருகாலத்தில் நக்சலைட்டுகளின் பயங்கரவாதத்தால் இருள் நிலவிய பகுதிகளில்கூட தற்போது தீபங்கள் ஏற்றப்பட்டதாகவும் திரு மோடி கூறினார்.

“நக்சலைட்டுகளின் அச்சுறுத்தல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அரசின் முயற்சிகள் வெளிச்சத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டு வந்துள்ளன. ஒரு காலத்தில் பயத்தில் வாழ்ந்த மக்கள் தற்போது நக்சலைட்டுகள் செல்வாக்கை முற்றிலுமாக ஒழிக்க விரும்புகின்றனர்,” என்றார் பிரதமர் மோடி.

மக்கள் எங்கு வாழ்ந்தாலும் மரங்களை நட வேண்டும் என்றும் அவை ஒவ்வொரு உயிரினங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார். ‘தாயின் பெயரில் ஒரு மரம் நடுவோம்’ இயக்கத்தில் இணைந்து நாம் அனைவரும் மரங்கள் நட வேண்டும் என திரு மோடி அழைப்பு விடுத்தார்.

ஜிஎஸ்டி சீர்திருத்தம் மக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார் அவர்.

“இந்த முறை பண்டிகைகளின்போது சந்தைகளில் சுதேசிப் பொருள்களின் விற்பனை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது.

“சமையல் எண்ணெய்யைப் பயன்படுத்துவதை 10% குறைத்துக் கொள்ளுங்கள் என்று நான் உங்கள் அனைவரிடமும் வேண்டுகோள் விடுத்திருந்தேன். இது தொடர்பாக உங்கள் செயல்பாடுகளைப் பார்க்க முடிந்தது,” என்று பிரதமர் மோடி மேலும் கூறினார்.

குறிப்புச் சொற்கள்