1,000 கிலோ எடையுள்ள கம்பம் விழுந்து சமாஜ்வாதி கட்சித் தலைவர் உயிரிழப்பு

1,000 கிலோ எடையுள்ள கம்பம் விழுந்து சமாஜ்வாதி கட்சித் தலைவர் உயிரிழப்பு

1 mins read
f6ea095a-dc26-4262-86c6-a06985ff3e59
1,000 கிலோ எடையுள்ள கம்பம் விழுந்ததில் காரில் இருந்த லால் பகதூர் யாதவ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். - படம்: தினகரன்

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம், பிரதாப்கர் மாவட்டத்தில் 1,000 கிலோ எடையுள்ள உயர் கோபுர விளக்குக் கம்பம் கார் மீது விழுந்து ஏற்பட்ட விபத்தில், சமாஜ்வாதி கட்சியின் முக்கியத் தலைவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பிரதாப்கர் மாவட்டத்தின் அந்து என்று பகுதியில் கிட்டத்தட்ட 1,000 கிலோ எடையுள்ள உயர் கோபுர இரும்புக் கம்பம் ஒன்றை நிறுவும் பணியில் ஈடுபட்டிருந்தபோது அது திடீரெனச் சரிந்தது.

அந்த நேரத்தில் அவ்வழியாகச் சென்று கொண்டிருந்த காரின் மீது கம்பம் விழுந்ததில், காரில் பயணம் செய்த சமாஜ்வாதி கட்சியின் முக்கியத் தலைவரான லால் பகதூர் யாதவ் (47) என்பவர் உடல் நசுங்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

போதிய பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றும் அலட்சியமே விபத்திற்குக் காரணம் என்றும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

லால் பகதூர் யாதவ் கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டவர்.

மேலும், இவர் பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரராகவும் அரசு மதுபானக்கடை உரிமையாளராகவும் இருந்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்