புதுடெல்லி: இந்தியாவின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ( எஸ்பிஐ), இதுவரை இல்லாத பெரிய கடன் தொகையாக 10,500 கோடி ரூபாய் (ஏறக்குறைய $1.25 பில்லியன் டாலர்) கடன் பெற திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எஸ்பிஐக்கு இந்தக் கடனை பெற்றுத் தருவதில் சில குறிப்பிட்ட சில வங்கிகள், நிதி நிறுவனங்கள் முனைப்புடன் செயல்பட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது.
ஐந்து ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தக்கூடிய இந்தக் கடன் குறித்து எஸ்பிஐ தரப்பில் ஏதும் தெரிவிக்கவில்லை என்றது தினமலர் நாளிதழ்.
வங்கிகளை பொறுத்தவரை, 75 கோடி டாலர் கடன்தான் இதுவரை அதிகபட்சமாக பெற்ற கடனாக இருந்தது. இதற்கு முன், ‘பாங்க் ஆப் பரோடா’ 75 கோடி டாலர் கடன் பெற்றிருந்தது.

