பள்ளி இடைநிற்றல்: மாணவர்கள் வீட்டுகளுக்குச் செல்லும் காவல்துறை

பள்ளி இடைநிற்றல்: மாணவர்கள் வீட்டுகளுக்குச் செல்லும் காவல்துறை

1 mins read
9bea8c37-3b83-4dc2-8357-f6e8168a142e
ஏப்ரல் 4ஆம் தேதி நடந்த அக்குழுக் கூட்டத்தில் அம்மாநிலத் தலைமைச் செயலாளர் கல்வித்துறைக்கு முக்கியமான சில உத்தரவுகளைப் பிறப்பித்தார். - படம்: ஊடகம்
Google News Preferred Icon

புதுடெல்லி: இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் பள்ளி இடைநிற்றலுக்குத் தீர்வு காணும் வகையில், படிப்பைப் பாதியில் கைவிட்டவர்களின் வீடுகளுக்கே சென்று காவல்துறையினர் ஆலோசனை வழங்க உள்ளனர்.

அம்மாநிலத்தில் பாஜக அரசு அமைந்த தருணத்தில் உள்துறை, காவல்துறை, சட்ட ஒழுங்குப் பிரச்சினைகளைக் கையாள ஒருங்கிணைப்புக்குழு அமைக்கப்பட்டது.

ஏப்ரல் 4ஆம் தேதி நடந்த அக்குழுக் கூட்டத்தில் அம்மாநிலத் தலைமைச் செயலாளர் கல்வித்துறைக்கு முக்கியமான சில உத்தரவுகளைப் பிறப்பித்தார்.

அவற்றில், புதுடெல்லி காவல்துறைக்குப் பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் பட்டியலை வழங்குவது மிகவும் முக்கியமானதாகும்.

மேலும், போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்கு எதிராக எடுக்க வேண்டிய சில ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

இடைநிற்றல் தரவுகளுடன் ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒருமுறை காவல்துறையினர் பள்ளியிலிருந்து இடைநின்ற மாணவரின் வீட்டுக்கே சென்று, என்ன காரணத்துக்காகப் படிப்பை அவர்கள் நிறுத்தினர், என்ன பிரச்சினை போன்ற தகவல்களை அவர்கள் சேகரிக்கவேண்டும்.

குறிப்புச் சொற்கள்
புதுடெல்லிபள்ளிமாணவர்கள்