தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விமானப் பயணத்தின் போது பெண் பயணியைக் கொட்டிய தேள்

1 mins read
eb3094ff-0b8b-44b3-acca-d3314cfde5ae
படம்: ராய்ட்டர்ஸ் -

இந்தியாவில் விமானப் பயணித்தில் இருந்த பெண் பயணியை தேள் ஒன்று கொட்டியுள்ளது.

மிகவும் அறிய வகை சம்பவமாகப் பார்க்கப்படும் இது நாக்பூரிலிருந்து

மும்பை சென்ற ஏர் இந்தியா விமானத்தில் நடந்தது.

சம்பவம் ஏப்ரல் 23ஆம் தேதி நடந்ததாகவும் தேள் கொட்டிய பயணிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் விமான நிறுவனம் தெரிவித்தது. பயணி தற்போது நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும் நிறுவனம் குறிப்பிட்டது.

விமானத்தில் அனைத்து விதிமுறைகளும் கடைப்பிடிக்கப்பட்டதாகவும், பயணியின் புகாருக்குப் பிறகு விமானம் முழுமையாகச் சுத்தம் செய்யப்பட்டு தேள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இச்சம்பவத்திற்கு பிறகு ஏர் இந்தியா நிறுவனம் அதன் ஊழியர்களிடம் இருக்கைகள் மற்றும் அதன் தொடர்பான பொருள்கள் சுத்தமாக இல்லாமல் இருந்தால் உடனடியாக சுத்தம் செய்யும் படி கேட்டுக்கொண்டது. அதன் மூலம் பூச்சி மற்றும் வண்டுகள் விமானத்தில் இல்லாமல் பார்த்துக்கொள்ளமுடியும் என்று அதிகாரிகள் கூறினர்.

கடந்த டிசம்பர் மாதம் சரக்குகளை ஏற்றிச்செல்லும் ஏர் இந்திய விமானத்தில் பாம்பு ஒன்று இருந்தது, விமானம் கோழிக்கோடில் இருந்து துபாய் சென்றது. துபாய் விமான நிலையத்தில் பாம்பு கண்டுபிடிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்