புதுடெல்லி: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை (எஸ்ஐஆர்) மூலம் ஆறு மாநிலங்கள், மூன்று யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 6.5 கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
முதற்கட்டமாக பீகார் மாநிலத்தில் எஸ்ஐஆர் நடவடிக்கையின் மூலம் லட்சக்கணக்கானோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன.
இரண்டாம் கட்டமாக தமிழ்நாடு, கேரளா, குஜராத், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், சத்தீஸ்கர், கோவா ஆகிய ஒன்பது மாநிலங்களிலும், புதுவை, அந்தமான், லட்சத்தீவுகள் ஆகிய மூன்று யூனியன் பிரதேசங்களிலும் எஸ்ஐஆர் பணிகள் கடந்த நவம்பர் 4ஆம் தேதி தொடங்கின.
எஸ்ஐஆர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் முன்பு ஒட்டுமொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 50.90 கோடியாக இருந்தது. தற்போது அந்த எண்ணிக்கை 44.40 கோடியாக குறைந்துள்ளது.
தமிழ்நாட்டில் மட்டும் ஏறக்குறைய 97 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
ஆக அதிகமாக, உத்தரப்பிரதேச மாநிலத்தில் எஸ்ஐஆர் நடவடிக்கைக்குப் பிறகு 2.9 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
பல மாநிலங்களில் கிராமப்புறங்களுடன் ஒப்பிடும்போது, நகர்ப்புறங்களில் கணக்கெடுப்பு படிவங்கள் மிகக் குறைவாகவே பெறப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

