உணவருந்திக்கொண்டு இருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு பாதுகாவலர் மரணம் (காணொளி)

உணவருந்திக்கொண்டு இருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு பாதுகாவலர் மரணம் (காணொளி)

19 Feb 2023 - 6:02 pm

1 mins read

பாதுகாவலர் ஒருவர் உணவருந்திக்கொண்டு இருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவர் மயங்கி விழுவதைக் காட்டும் சிசிடிவி காணொளிக் காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம், சாகர் மாவட்டத்தில் இச்சம்பவம் நிகழ்ந்தது.

அறையில் இருக்கையில் அமர்ந்தவாறு அவர் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி சுவரில் சாய்ந்தார்.

சுயநினைவு இழந்த அந்த ஆடவர், சில நொடிகளில் தரையில் விழுந்தார். அவர் இறந்துவிட்டதாக ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.