தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சென்னை விமான நிலையத்தில் உயர்ரக கஞ்சா பறிமுதல்

1 mins read
d0ad1905-88ed-47c3-81cb-7586ec1e6496
சென்னை விமான நிலையம். - படம்: ஊடகம்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.3.8 கோடி மதிப்புள்ள உயர் ரக கஞ்சாவை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக போதைப்பொருள்கள் கடத்தி வருவதைத் தடுக்க சென்னை விமான நிலையத்திற்கு வரும் உள்நாட்டு, வெளிநாட்டுப் பயணிகளை சுங்கத்துறையினர் சோதனை செய்வது வழக்கம்.

இலங்கையில் இருந்து சென்னை வந்த ஸ்ரீலங்கன் ஏர்வேஸ் விமானப் பயணியிடம் சோதனை நடத்தினர். அப்போது, அவரிடம் சுமார் 2.8 கிலோ மதிப்புள்ள உயர் ரக கஞ்சா இருப்பது தெரிய வந்தது. உடனடியாக அதனைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், இதுகுறித்து விசாரணை நடத்தினர்.

தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட அந்த கஞ்சாவை இலங்கை, சென்னை வழியாக பெங்களூரு கொண்டு செல்ல திட்டம் தீட்டியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதன் மதிப்பு ரூ.2.8 கோடியாகும். அதேபோல, தாய்லாந்தில் இருந்து சென்னை வந்த சரக்கு விமானத்தில் ஒரு கிலோ உயர் ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.1 கோடியாகும்.

இந்தக் கஞ்சா பொட்டலம் யாருக்கு வந்துள்ளது என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2 மாதங்களில் மட்டும் ரூ.10 கோடி மதிப்பிலான ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்