தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நிவின்பாலி மீதான பாலியல் புகாரில் அதிரடித் திருப்பம்

1 mins read
8bdf065c-5f59-4760-8d00-f9a2af9b446d
வெளிநாட்டில் வைத்துப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கூறப்படும் அந்தச் சமயத்தில் நிவின்பாலி கொச்சியில் தங்கி இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.  - கோப்புப்படம்: ஊடகம்

திருவனந்தபுரம்: அண்மையில் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி 2023ஆம் ஆண்டு வெளிநாட்டில் வைத்து நிவின் பாலி உள்ளிட்ட சிலர், பாலியல் ரீதியாக தன்னைத் துன்புறுத்தியதாகச் சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் பெண் ஒருவர் புகார் அளித்தார். இதனையடுத்து, நடிகர் நிவின் பாலி மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்தது.

இது மலையாள திரையுலகில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. இதற்கிடையே பாதிக்கப்பட்ட நடிகைகள் அரசு அமைத்த சிறப்பு விசாரணைக் குழுவிடம் ரகசியமாக வாக்குமூலம் அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், நிவின் பாலி மீதான புகார் தொடர்பாகப் பரபரப்புத் தகவல்கள் வெளியானதால் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, வெளிநாட்டில் வைத்துப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கூறப்படும் அந்தச் சமயத்தில் நிவின்பாலி கொச்சியில் தங்கி இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மலையாளத் திரையுலகில் பெண்களுக்குப் பாலியல் துன்புறுத்தல் தொடர்ந்து நடந்து வருவதாக அண்மையில் வெளியான ஹேமா கமிட்டி ஆய்வறிக்கை, இந்தியத் திரையுலகையே உலுக்கியுள்ளது.

பிரபல நடிகைக்குக் கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தையடுத்து, படப்பிடிப்பில் நடிகைகள் மற்றும் பணிப் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் விசாரணை குழுவை அமைத்தது கேரள அரசு.

இந்தக் குழு கடந்த 2019ஆம் ஆண்டு அம்மாநில முதல்வரிடம் ஆய்வறிக்கையை தாக்கல் செய்தது. ஆனால், அந்த ஆய்வறிக்கை பொதுவெளியில் வெளியிடப்படாமல் இருந்த நிலையில், தகவல் உரிமை ஆணையத்தின் தலையீட்டால் அண்மையில் வெளியானது.

குறிப்புச் சொற்கள்