பூட்டிக் கிடந்த காரில் ஏழு சடலங்கள்

1 mins read
eef23cba-53ef-4dfe-984c-c0cebef71869
பிரவீன் மிட்டலின் குடும்பத்தார் வீட்டிற்கு வெளியே உள்ள காரில் மயக்கமடைந்த நிலையில் கிடப்பதாக அப்பகுதி மக்கள் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். - படம்: ஊடகம்

டேராடூன்: பூட்டிக் கிடந்த காரில் இருந்து, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டது ஹரியானாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டேராடூனைச் சேர்ந்த 42 வயாதன பிரவீன் மிட்டல் என்பவர் தனது பெற்றோர், மனைவி, மூன்று குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

அவர், கடந்த சில மாதங்களாக கடும் நிதி நெருக்கடியில் இருந்ததாகவும் அதனால் குடும்பத்துடன் உயிரை மாய்த்துக்கொள்ள முடிவெடுத்ததாகவும் தெரிகிறது.

இந்நிலையில், பிரவீன் மிட்டலின் குடும்பத்தார் வீட்டிற்கு வெளியே உள்ள காரில் மயக்கமடைந்த நிலையில் கிடப்பதாக அப்பகுதி மக்கள் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், பிரவீன் படேல் எழுதி வைத்த கடிதம் கிடைத்துள்ளது.

குறிப்புச் சொற்கள்