புதுடெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவைத் தொடர்ந்து மத்திய அரசு சார்பில் ஏழு நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நாள்களில் எந்தவித அரசு விழாக்களும் நடைபெறாது. மத்திய அரசு அலுவலகங்களில் தேசியக் கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்படும்
மன்மோகன் சிங் இறுதிச் சடங்கு சனிக்கிழமை அன்று நடைபெறும்.
அடுத்த ஏழு தினங்களுக்கு காங்கிரஸ் கட்சியின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக, கே.சி. வேணு கோபால் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

