திருப்பதி அறங்காவலர் குழுவில் தமிழகம் உட்பட பல மாநிலத்தவர்கள்

1 mins read
cf9334c1-817d-4e2b-a4aa-165dbcdf8314
திருப்பதி தேவஸ்தானத்தின்புதிய அறங்காவலர் குழு தலைவர்  பி.ராஜகோபால் நாயுடு. - படம்: இந்திய ஊடகம்

திருப்பதி தேவஸ்தானத்திற்கு சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த பி.ராஜகோபால் நாயுடு தலைமையில் புதிய அறங்காவலர் குழு அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூரை சேர்ந்த தொழிலதிபர் ராமமூர்த்தி, சென்னையை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவருடன் தெலுங்கானாவைச் சேர்ந்த ஐவர், கர்நாடக மாநிலத்திலிருந்து மூவர், குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து தலா ஒருவர் என மொத்தம் 25 பேர் புதிய குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

“எந்தவொரு முடிவையும் தன்னிச்சையாக எடுக்காமல், அறங்காவலர் குழுவில் விவாதித்து எடுப்பேன். திருமலையில் இந்துக்கள் மட்டுமே பணியாற்ற வேண்டும் என்பது எனது கருத்தாகும். இதுகுறித்தும் அறங்காவலர் குழுவில் விவாதித்து முடிவெடுக்கப்படும்,” என்று நியமனம் குறித்து பி.ஆர். நாயுடு கூறினார்.

இதனால் திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றும் 50க்கும் மேற்பட்ட வேற்றுமத ஊழியர்கள் கவலை அடைந்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்