பாலியல் புகார்; பிரபல நடன இயக்குநர் ஜானி கைது

1 mins read
d33dea1e-01f9-48ee-b449-8aa66117500d
நடன இயக்குநர் ஜானி - படம்: சமூக ஊடகம்

பெங்களூரு: தென்னிந்திய திரைத்துறையில் முன்னணி நடன இயக்குநராக வலம் வருபவர் ஜானி.

தற்போது அவர் ‘போக்சோ’ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜானியுடன் பணியாற்றிய 21 வயது பெண் அளித்த புகாரின் பெயரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புகார் கொடுத்த பெண், தான் 16 வயதில் இருந்தபோது ஜானி பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தெரிவித்திருக்கிறார்.

சென்னை, மும்பை,ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நடந்த படப்பிடிப்பின்போது தாம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக அப்பெண் புகார் கொடுத்துள்ளார்.

மேலும், நரசிங்கியில் உள்ள ஜானியின் வீட்டில் பல முறை தாம் தாக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

அதைத்தொடர்ந்து, தெலுங்கானா மாநிலம் சைபெராபாத்தில் ஜானிமீது பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தேசிய விருது பெற்ற ஜானி, தெலுங்குத் திரையுலகில் பணியாற்ற ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. புகார் அளிக்கப்பட்ட பிறகு ஜானி தலைமறைவாகிவிட்டார்.

5 நாள்கள் தேடுதலுக்குப் பிறகு ஜானி பெங்களூரில் கைது செய்யப்பட்டார்.

மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு ஜானி நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார். அவரை அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்