கப்பல் மோதல் விவகாரம்: பாகிஸ்தான் தூதரக அதிகாரியிடம் இந்தியா கண்டனம்

கப்பல் மோதல் விவகாரம்: பாகிஸ்தான் தூதரக அதிகாரியிடம் இந்தியா கண்டனம்

2 mins read
ed9bd17f-11c2-4d7c-b365-833cc73ae35c
வழக்​க​மான கண்​காணிப்​புப் பணி​யில் ஈடு​பட்​டிருந்த இந்​தி​யக் கடற்​படை​யின் போர்க் கப்​பலை நோக்கிப் பாகிஸ்​தான் கடற்படைக் கப்​பல் ஒன்று அதிக வேகத்​தில் மோதி​யது. - படம்: இபிஏ

புதுடெல்லி: அரபிக் கடலின் வடபகுதியில் கண்​காணிப்​புப் பணி​யில் ஈடு​பட்​டிருந்த இந்தியக் கடற்​படை​யின் போர்க் கப்​பல் மீது பாகிஸ்​தான் கடற்​படைக் கப்​பல் மோதி​யது தொடர்​பாக, அந்​நாட்டுத் தூதரகத்​தின் பொறுப்பு அதி​காரியை நேரில் அழைத்து இந்​தியா கண்​டனம் தெரி​வித்​துள்ளது.

அரபிக் கடலின் வடபகுதியில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 15) வழக்​க​மான கண்காணிப்புப் பணி​யில் ஈடு​பட்​டிருந்த இந்​தி​யக் கடற்​படை​யின் போர்க் கப்​பலை நோக்கிப் பாகிஸ்​தான் கடற்​படைக் கப்​பல் ஒன்று அதிக வேகத்​தில் மோதி​யது.

அந்தச் சம்​பவத்​தில் பெரிய அளவில் சேதம் ஏற்​பட​வில்லை என்று மத்​திய வெளி​யுறவுத் துறை அமைச்சு தெரி​வித்​தது.

எனினும், அந்தச் சம்​பவத்​துக்கு இந்​தியா கடும் கண்​டனம் தெரி​வித்​துள்​ளது.

இதுதொடர்​பாக, இந்​தி​யா​வுக்​கான பாகிஸ்​தான் தூதரகப் பொறுப்பு அதி​காரி சாத் வார்ரைச்சை வெளி​யுறவுத்​துறை அமைச்சுக்கு நேரில் அழைத்துக் கண்​டனம் தெரிவிக்கப்பட்​டது.

“கடலில் பாகிஸ்​தான் கடற்​படைப் பிரிவு​கள் ஏற்​றுக்​கொள்ள முடி​யாத, தொழில்​முறையற்ற நடவடிக்கையை மேற்கொண்டதால் இந்​தி​யக் கடற்​படைப் பிரிவுடன் மோதல் ஏற்​பட்​டது,” என்று அவரிடம், இந்​தியா கடும் எதிர்ப்பைப் பதிவு செய்​த​தாக வெளி​யுறவுத்​துறை அமைச்சு தெரி​வித்​தது.

பாகிஸ்தானின் நடவடிக்கை, 1991ஆம் ஆண்டு ஏப்​ரல் மாதம் இந்​தி​யா-​பாகிஸ்​தான் இடையே மேற்​கொள்​ளப்​பட்ட ராணுவ நடவடிக்​கைகள், படை நகர்​வு​கள் குறித்து முன்கூட்டியே தகவல் அளிக்​கும் ஒப்​பந்​தத்​தின் 10வது பிரிவுக்கு முரணானது என்று வெளியுறவுத் துறை அமைச்சு தெரி​வித்​தது.

இது​போன்ற சம்​பவங்​கள் மீண்​டும் நடை​பெறாமல் தடுக்​கும் வகை​யில், இரு நாட்டு ஒப்​பந்​த விதி​களை மதித்​து, உரிய கவனத்​துடன் அனைத்து ராணுவப் பிரிவு​களும் செயல்பட வேண்டியதன் அவசி​யத்தைப் பாகிஸ்​தான் அதி​காரி​களிடம் தெரிவிக்​கு​மாறு அந்​நாட்டுப் பொறுப்பு அதி​காரி​யிடம் இந்​தியா அறி​வுறுத்​தி​யது.

குறிப்புச் சொற்கள்
பாகிஸ்தான்கப்பல்கண்டனம்