தேடப்பட்டு வந்த லஷ்கர் தீவிரவாதி சுட்டுக்கொலை

1 mins read
4de71e56-3956-44ed-bd58-683b12ee77cf
ஜம்மு - காஷ்மீரின் தலைநகரான ஸ்ரீநகரின் புறநகரில் இந்தியப் பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடக்கும் இடத்திற்குச் செல்லும் சாலையில் இந்திய துணை ராணுவப் படையினர் சுற்றுக்காவலில் ஈடுபட்டுள்ளனர். - படம்: இபிஏ

புதுடெல்லி: லஷ்கர்-இ-தொய்பா என்னும் பாகிஸ்தானிய தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த ஜுனாயித் அகமது பட் என்பவரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.

கஹாங்கீர், கந்தர்பால் பகுதிகளில் ஆறு தொழிலாளர்கள், ஒரு மருத்துவர் ஆகியோரைக் கொன்றதாகக் கூறப்படும் வழக்கில் தேடப்பட்டு வந்தவர் தான் அந்தத் தீவிரவாதி அகமது பட். காவல்துறையினரின் கண்களில் படாமல் கடந்த ஓராண்டாக தலைமறைவாக இருந்து வந்தார் அகமது பட்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை கந்தர்பால் பகுதியில், தீவிரவாதிகளைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டனர் பாதுகாப்புப் படையினர். அப்போது படையினரிடம் இருந்து தப்பித்து ஓட முயற்சி செய்த அகமது பட் சுட்டுக் கொல்லப்பட்டார்.

மேலும், லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் மர்யாமா பேகம், அ;ர்ஷத் பேகம் ஆகிய இரண்டு பெண்களை காவல்துறை பிடித்து விசாரித்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்