சாதனை அளவு வருவாய் ஈட்டிய ‘ஷாப்பீ’

சாதனை அளவு வருவாய் ஈட்டிய ‘ஷாப்பீ’

1 mins read
d9570fd2-ce46-4f6c-957c-310de2bce1fd
செயற்கை நுண்ணறிவின் துணையோடு ‘ஷாப்பீ’ சாதனை புரிந்துள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் இணைய வர்த்தக நிறுவனமான ஷாப்பீ, இவ்வாண்டின் முதலாம் காலாண்டில் சாதனை அளவில் வருவாய் ஈட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

அதனைச் சாதிக்க செயற்கை நுண்ணறிவு அந்நிறுவனத்திற்கு உதவியுள்ளது.

தாய் நிறுவனமான ‘சீ லிமிடெட்’டின் வருவாய் US$7 பில்லியனுக்கு (S$8.9 பில்லியன்) அதிகரித்ததன் காரணமாக ஷாப்பீயின் வருவாயும் உயர்ந்தது.

சீ நிறுவனத்தின் வலுவான நிதிநிலை அறிக்கை காரணமாக, அதன் பங்கு விலை 13 விழுக்காடு உயர்ந்தது. சிங்கப்பூர் நேரப்படி புதன்கிழமை (மே 13) மாலை 4 மணியளவில் அதன் பங்கு விலை US$96.02 என வர்த்தகம் செய்யப்பட்டது.

இந்நிலையில் சீ நிறுவனத்தின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஃபாரஸ்ட் லீ, ஷாப்பீ நிறுவனம் மற்றொரு சாதனை படைக்கும் காலாண்டை நிறைவு செய்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

“மொத்த விற்பனை மதிப்பு, மொத்த ஆர்டர் எண்ணிக்கை மற்றும் வருவாய் ஆகிய பிரிவுகளில் ‘ஷாப்பீ’ புதிய உச்சங்களை எட்டியுள்ளது. ஷாப்பீயில் செயற்கை நுண்ணறிவை ஒருங்கிணைத்தது ஒரு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது,” என்றார் அவர்.

ஷாப்பீ இணைய வர்த்தகத்தின் மொத்த விற்பனை மதிப்பு, முதலாம் காலாண்டில், ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 30 விழுக்காடு வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

வட்டி, வரி, தேய்மானச் செலவு மற்றும் ஈட்டாச் சொத்துத் தேய்மானச் செலவுக்கு முந்தைய சரிசெய்யப்பட்ட வருவாயாக US$220 மில்லியனுக்கும் அதிகமான தொகையை ஷாப்பீ ஈட்டியுள்ளது.

குறிப்புச் சொற்கள்