விசாரணையில் ஒத்துழைக்க நடிகர் சித்திக் ஒப்புதல்

1 mins read
93d9b9e0-284b-40c8-b59d-c54f40a3db0e
பிரபல மலையாள நடிகர் சித்திக். - கோப்புப் படம்: தி இந்து / இணையம்

கொச்சி: பாலியல் விவகாரத்தில் சிக்கியுள்ள பிரபல மலையாள நடிகர் சித்திக், சிறப்பு விசாரணைக் குழுவிடம் (SIT) தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ள ஒப்புக்கொண்டுள்ளார்.

சிறப்பு விசாரணைக் குழு கேள்விகள் எழுப்பி தன்னிடம் விசாரணை நடத்த சித்திக் மின்னஞ்சல் மூலம் ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு விசாரணைக் குழுவைச் சேர்ந்த ஒருவர், ஒன்மனோரமா ஊடகத்திடம் அத்தகவலை உறுதிப்படுத்தினார்.

“இனி விசாரணைக்கான தேதியை முடிவுசெய்து தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்வோம்,” என்று அந்த சிறப்பு விசாரணைக் குழு உறுப்பினர் குறிப்பிட்டார். சித்திக், எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண் கலைஞருக்குப் பாலியல் வன்கொடுமை இழைத்ததாக நம்பப்படுகிறது.

ஹேமா குழுவின் அறிக்கை வெளிவந்த பிறகு நடிகை ஒருவர் சித்திக் மீது புகார் அளித்தார். கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் இருக்கும் மேஸ்காட் ஹோட்டலில் 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28ஆம் தேதியன்று சித்திக் தனக்குப் பாலியல் வன்கொடுமை இழைத்தார் என்று அப்பெண் குற்றஞ்சாட்டினார்.

திரைப்படம் ஒன்றின் சிறப்புத் தொடக்கக் காட்சி ஒளிபரப்பப்பட்ட பிறகு அச்சம்பவம் நிகழ்ந்ததாக அந்தப் பெண் சொன்னார்.

கடந்த செப்டம்பர் மாதம் 24ஆம் தேதியன்று கேரள உயர் நீதிமன்றம், சித்திக்கை முன்பிணையில் விடுவிக்க மறுத்தது. எனினும், சித்திக் கைதாகாமல் இருக்க செப்டம்பர் 30ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றம் அவருக்கு இடைக்காலப் பாதுகாப்பு வழங்கியது.

குறிப்புச் சொற்கள்