விசாகப்பட்டினத்தில் அறிமுகமாகும் ‘ஸ்கை சைக்கிள்’

1 mins read
cab12065-8f15-420d-a9bb-23477527308d
விசாகப்பட்டினம் நீலக் கடற்கரையைச் சுற்றுலாப் பயணிகள் ரசிக்கும் விதமாக ‘ஸ்கை சைக்கிள்’ திட்டம் கொண்டுவரப்படுகிறது. - படம்: இந்திய ஊடகம்

திருப்பதி: ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காகப் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக கைலாசகிரி மலை மற்றும் விசாகப்பட்டினம் நீலக் கடற்கரை ஆகியவற்றின் இயற்கை அழகைச் சுற்றுலாப் பயணிகள் ரசிக்கும் விதமாக ‘ஸ்கை சைக்கிள்’ அறிமுகம் காண்பதாகக் கூறப்படுகிறது.

சாகச விளையாட்டுகளில் விருப்பமுள்ளோர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள கயிற்றின்மேல் சைக்கிளில் செல்லலாம். அவர்கள் மேலே வேறொரு கயிற்றுடன் இணைக்கப்பட்டிருப்பர்.

அந்தரத்தில் செல்வதுபோல் சைக்கிளை மிதிக்கும் வேளையில் சுற்றியுள்ள காட்சிகளையும் இதில் ரசிக்க முடியும்.

சில நாள்களாக இதற்கான ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, ஒத்திகை பார்க்கப்பட்டதாக ஊடகங்கள் கூறுகின்றன.

ஸ்கை சைக்கிள் திட்டத்தில் இயற்கை அழகை ரசிக்க சுற்றுலாப் பயணிகளோடு உள்ளூர் மக்களும் ஆவலுடன் காத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்