சிறுவர்களுக்கு காலனாக வந்த பாம்பு

1 mins read
88e59d02-77bf-411d-a1a3-8ed21b4a6cfb
விபத்தில் இறந்த சிறுவர்கள். - படம்: இந்திய ஊடகம்

கேரளா: கேரளாவில் பாம்பு குறுக்கே சென்றதால் ஆட்டோ கவிழ்ந்து 2 பள்ளிக் குழந்தைகள் பலியானது அந்த பகுதியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு ஆட்டோ ஒன்று சென்றது. அப்போது, ஆட்டோவின் முன்னால் திடீரென பாம்பு ஒன்று குறுக்கே சென்றுள்ளது.

அதனால், பாம்பின் மீது ஏற்றிவிடக் கூடாது என்பதற்காக அதன் ஓட்டுநர் ஆட்டோவை வேறு பக்கம் திருப்பியுள்ளார்.

அப்போது, ஆட்டோ புரண்டு, பக்கத்தில் இருந்த வாழைத் தோட்டத்திற்குள் கவிழ்ந்தது.

அந்த விபத்தில் சிக்கி, ஆட்டோவில் இருந்த பள்ளி மாணவ மாணவிகள் படுகாயமடைந்தனர். ஆட்டோ விழுந்ததில் ஆதி லட்சுமி (வயது 8), கிருஷ்ணன் (வயது 4) ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ஆட்டோ ஓட்டுநருக்கும் காயம் ஏற்பட்டது. காயமடைந்த சிறுவர்கள் சிகிச்சைக்காக கோட்டயம் மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு சென்றனர். இதுபற்றி போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்