பாப்பா கடித்ததில் பாம்பு மாண்டது

பாப்பா கடித்ததில் பாம்பு மாண்டது

1 mins read
45276eff-c2bb-4b0a-9336-3cdd47ae5eac
பாம்பைக் கடித்த குழந்தை (இடம்). - படங்கள்: தினத்தந்தி

பாட்னா: பீகார் மாநிலம் கயாவில் உள்ள ஜாமுகர் கிராமத்தில் ஒரு வயதுக் குழந்தை கடித்ததில் ஒரு பாம்பு மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டின் மாடியில் குழந்தை விளையாடிக் கொண்டிருந்ததாகவும் அப்போது அங்கு வந்த சிறிய வகைப் பாம்பைக் கண்ட அக்குழந்தை விளையாட்டுப் பொருள் எனக் கருதி அதைக் கையில் பிடித்து வாயில் வைத்துக் கடித்ததாகவும் தெரிகிறது.

குழந்தை தனது வாயில் வைத்துப் பாம்பைக் கடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்த தாயார் அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாகக் குழந்தையிடம் இருந்து பாம்பைப் பிடுங்கி வீசிவிட்டு குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றார்.

அங்குக் குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் அதற்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று தெரிவித்தனர்.

குழந்தை கடித்ததால் காயமடைந்த அப்பாம்பு உயிரிழந்தது பின்னர் தெரியவந்தது.

அது விஷத்தன்மை இல்லாத பாம்பு என்பதால் நல்லவேளையாகக் குழந்தைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்றாலும் குழந்தை கடித்ததில் பாம்பு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பேசுபொருளாகி வருகிறது.

குறிப்புச் சொற்கள்