ஆக மகிழ்ச்சியான நகரங்களின் பட்டியலில் ஜெய்ப்பூர்

ஆக மகிழ்ச்சியான நகரங்களின் பட்டியலில் ஜெய்ப்பூர்

கோப்புப் படம்: புதிய தலைமுறை

23 Jul 2026 - 11:15 am

1 mins read

ஜெய்ப்பூர்: உலகின் மகிழ்ச்சியான நகரங்களின் பட்டியலில் இந்தியாவின் ஜெய்ப்பூர் நகரம் இடம்பெற்றுள்ளது.

மொத்தம் 20 நகரங்களைக் கொண்ட பட்டியலில் ஜெய்ப்பூருக்கு ஆறாம் இடம் கிடைத்துள்ளது.

பிரிட்டனின் ‘டைம் அவுட்' குழுமம் வெளியிட்ட 2026ஆம் ஆண்டுக்கான உலகின் ஆக மகிழ்ச்சியான நகரங்களுக்கான பட்டியலில் இங்கிலாந்தின் பாஸ் நகரம் முதலிடத்தையும் பனாமா நாட்டின் பனாமா நகரம் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளன

ஏறக்குறைய 24,000 உள்ளூர்வாசிகளிடம் கருத்து திரட்டி, மகிழ்ச்சியான நகரங்களுக்கான பட்டியல் தயாரிக்கப்பட்டது.

நகரங்களில் உள்ள இரவு வாழ்க்கை, உணவுக்காக மட்டும் மதிப்பிடாமல், சமூக உணர்வு, எந்த நகரம் காதல், மகிழ்ச்சி தருகிறது, போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு அம்சங்களும் கவனத்தில் கொள்ளப்பட்டன.

அந்த வகையில் சுவையான இந்திய உணவு, புகழ்பெற்ற அடையாளச் சின்னங்கள் ஆகியவற்றுக்காக பெயர் பெற்ற ஜெய்ப்பூர், ஆக மகிழ்ச்சியான நகரங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

வட இந்திய மக்கள் வார இறுதி நாள்களில் ஜெய்ப்பூருக்குப் பயணம் மேற்கொள்வதை வெகுவாக விரும்புகின்றனர் என்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் மற்ற மாவட்ட மக்களும் தங்கள் மாநிலத் தலைநகரை மிகவும் நேசிக்கின்றனர் என்றும் கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்