மேற்கு வங்கத் தேர்தலில் தனித்துப் போட்டி; 291 வேட்பாளர்களை அறிவித்த மம்தா

மேற்கு வங்கத் தேர்தலில் தனித்துப் போட்டி; 291 வேட்பாளர்களை அறிவித்த மம்தா

1 mins read
6e9f29a4-2058-47c2-a68f-2af8cbd5a3d5
 மேற்கு வங்கத்தில் உள்ள 291 தொகுதிகளில் திரிணாமூல் காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. - படம்: தி ஃபினான்ஷியல் எக்ஸ்பிரஸ்

கோல்கத்தா: மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 23, 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளன.

அங்குள்ள 291 தொகுதிகளில் திரிணாமூல் காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் மம்தா பானர்ஜி தலைமையில் ஆட்சி அமையும் எனக் கருத்துக்கணிப்புகள் தெரிவித்தாலும், வெற்றி பெறுவது அவ்வளவு எளிதல்ல என்றும் அக்கணிப்புகள் சுட்டிக்காட்டுவதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், திரிணாமூல் காங்கிரஸ் கட்சி சார்பாகப் போட்டியிடுவோர் பட்டியலை மம்தா பானர்ஜி செவ்வாய்க்கிழமை (மார்ச் 17) வெளியிட்டார்.

அங்கு 152 தொகுதிகளுக்கு முதல் கட்டமாகவும் 142 தொகுதிகளுக்கு இரண்டாவது கட்டமாகவும் தேர்தல் நடைபெற உள்ளது.

இதையடுத்து, அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதில், நட்சத்திர வேட்பாளர்களான சந்திரிமா பட்டாச்சார்யா டம்டம் உத்தர் தொகுதியிலும், மதன் மித்ரா கமர்ஹாத்தி, ஃபிர்ஹாத் ஹக்கீம் கோல்கத்தா துறைமுகம் தொகுதியிலும் குணால் கோஷ் பெலகாதா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். தற்போது முதல்வராகவுள்ள மம்தா பானர்ஜி, பவானிபூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

குறிப்புச் சொற்கள்