புதுடெல்லி: காங்கிரசின் மூத்த தலைவர் சோனியா காந்தி, 78, உடல்நலக் குறைவு காரணமாக டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லாவுக்கு அண்மையில் சென்ற சோனியா, உயர் ரத்த அழுத்தம் காரணமாக அங்குள்ள இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இந்நிலையில், டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் சோனியா காந்தி ஜூன் 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மீண்டும் அனுமதிக்கப்பட்டார்.
வயிறு தொடர்பான பிரச்சினைக்காக மருத்துவமனையின் இரைப்பை சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
அவருக்கு சிறப்பு மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

