சோனியா காந்தி சுயசரிதை நூல் வெளியீட்டுக்குத் தடை

சோனியா காந்தி சுயசரிதை நூல் வெளியீட்டுக்குத் தடை

2 mins read
d0f3eeec-6038-4993-8043-d4c2f1f294b5
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி எழுதியுள்ள ‘பிலாங்கிங்: ஏ ஜர்னி ஆஃப் லவ்’ புத்தகத்தில் சோனியா காந்தியின் சிறுவயது வாழ்க்கை, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியுடனான திருமணம், நேரு குடும்பத்தின் மருமகளாக மாறியது உட்பட பல தகவல்கள் இடம்பெற்றுள்ளன. - படம்: ஃப்ரைடேவால்.காம்
Google News Preferred Icon

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற மேலவை உறுப்பினருமான சோனியா காந்தி எழுதியுள்ள ‘பிலாங்கிங்: ஏ ஜர்னி ஆஃப் லவ்’ என்ற சுயசரிதை புத்தகத்தை இந்தியாவில் வெளியிடுவது தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது.

இப்புத்தகத்தில் பிரதமர் நரேந்திர மோடி, ஆர்.எஸ்.எஸ். இயக்கம் இந்தியா-சீனா எல்லை விவகாரங்கள் குறித்த சில பகுதிகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. 

அவற்றில் சில மாற்றங்களையும் திருத்தங்களையும் மேற்கொள்ளுமாறு பதிப்பக நிறுவனமான ‘பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா’ கோரியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

எனினும், வரலாற்று உண்மைகளையும் தனது சுயசரிதைக் குறிப்புகளையும் மாற்றியமைக்க சோனியா காந்தி மறுத்துவிட்டதால், இப்புத்தகத்தை இந்தியாவில் வெளியிடும் ஒப்பந்தத்திலிருந்து பென்குயின் நிறுவனம் பின்வாங்கியதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள பென்குயின் நிறுவனம், புத்தகங்களின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்வதும் ஆலோசனைகளை வழங்குவதும் பதிப்பகத்தின் இயல்பான நடைமுறை தான் என்றும், புத்தகத்தை வெளியிடுவதில் தங்களுக்கு மாற்றுக்கருத்து இல்லை என்றும் விளக்கமளித்துள்ளது. 

இதற்கிடையே, காங்கிரஸ் தலைவர்கள் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இது குறித்து கருத்துரைத்துள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் பா. மாணிக்கம் தாகூர், புத்தகத்தை வெளியிட இயலாமல் தடுக்க முயற்சிப்பது கருத்து சுதந்திரத்தின் குரல்வளையை நெரிப்பதற்கு ஒப்பானது என்று கூறியிருக்கிறார்

அமெரிக்காவின் பிரபல ‘ஆல்ஃபிரட் ஏ நாஃப்’ பதிப்பகம் வெளியிடும் 544 பக்க நூலில், இத்தாலியின் எளிய கிராமத்தில் வளர்ந்த ஒரு பெண், நேரு குடும்பத்தின் மருமகளாக மாறியது முதல் பல்வேறு தனிப்பட்ட இழப்புகள்வரை விரிவாகப் பேசப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் நவம்பர் 10ஆம் தேதி ‘ஆல்ஃபிரட் ஏ. நாஃப் பதிப்பகம்’ மூலம் இப்புத்தகம் வெளியாகவுள்ளது.

544 பக்கங்களைக் கொண்ட இப்புத்தகத்தில் சோனியா காந்தியின் சிறுவயது வாழ்க்கை, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியுடனான திருமணம், நேரு குடும்பத்தின் மருமகளாக மாறியது தொடங்கி அவர் சந்தித்த தனிப்பட்ட இழப்புகள், அரசியல் பயணம் உள்ளிட்ட பல நிகழ்வுகள் குறித்து இதுவரை அறிந்திராத தகவல்கள் விவரிக்கப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்