தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'நாட்டு நாட்டு' பாடலுக்கு ஆடி அசத்திய தென்கொரிய தூதர் (காணொளி)

1 mins read
95b59ad6-715b-45a8-9a80-eb58a88204ec
படம்: ROKEMBINDIA/டுவிட்டர் -

புதுடெல்லியில் உள்ள தென்கொரிய தூதரக ஊழியர்கள் புகழ்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடலுக்கு ஆடி அசைத்தியுள்ளனர். இவர்களுடைய ஆட்டம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தெலுங்கு மொழி பாடலான 'நாட்டு நாட்டு' பாடலுக்கு தென்கொரிய தூதுவரும் தூதரக ஊழியர்களும் ஆட்டம் போட்டனர். அந்த காணொளியை டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்தனர். அந்த காணொளியை கண்ட திரு மோடி அதை தமது டுவிட்டர் பக்கத்தில் மீண்டும் பதிவேற்றம் செய்து அந்த காணொளி சிறப்பாக உள்ளதை குறிக்க கட்டை விரலை மேலே காட்டும் செய்கையை பதிவில் சேர்த்துகொண்டார். அதோடு அருமை குழு முயற்சி என்றும் பதிவு செய்திருந்தார்.

அந்த காணொளி 5,800க்கும் அதிகமான தடவை டுவிட்டர் தளத்தில் மீண்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

'நாட்டு நாட்டு' பாடல் இதுவரை பல வெளிநாட்டு விருதுகளை வென்றுள்ளது. எதிர்வரும் ஆஸ்கர் விருது நிகழ்ச்சியில் சிறந்த பாடல் எனும் விருதுக்கு அது முன்மொழியப்பட்டுள்ளது.