புதுடெல்லி: வெளிநாடுகளைச் சேர்ந்த இந்திய வம்சாவளி (ஓசிஐ) விளையாட்டாளர்கள் இந்தியா சார்பில் விளையாடுவதை அனுமதிக்கும் வகையில், அவர்களுக்குச் சிறப்பு ‘விளையாட்டுக் கடப்பிதழ்’ (Sports Passport) வழங்குவது குறித்து இந்திய அரசு பரிசீலனை செய்து[Ϟ]வருகிறது.
அதற்காக, இந்திய விளையாட்டு அமைச்சும் வெளியுறவு அமைச்சும் இணைந்து ஒரு வரைவுக் கட்டமைப்பை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
இந்த முயற்சி இன்னும் தொடக்க நிலையிலேயே இருக்கிறது. ஏனெனில், ‘ஓசிஐ’ விளையாட்டாளர்களை இந்தியாவிற்காக விளையாட அனுமதிக்க வேண்டுமெனில், குடியுரிமைச் சட்டத்தில் விளையாட்டு அமைச்சு திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.
2036ஆம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த இந்தியா தீவிரமாக முயன்றுவரும் வேளையில், இந்த நடவடிக்கை மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
இந்தியா தற்போது பின்தங்கியிருக்கும் விளையாட்டுகளில் செயல்திறனை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம். குறிப்பாக, காற்பந்து விளையாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது. அனைத்துலக அளவில் இந்திய வம்சாவளி விளையாட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தற்போது நடந்துவரும் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளில் சர்பிரீத் சிங் (நியூ[Ϟ]சிலாந்து), சாமுவேல் முத்துசாமி (காங்கோ), நிஷான் வேலுப்பிள்ளை (ஆஸ்திரேலியா), தஷின் ஜாம்ஷிட் (கத்தார்) என இந்திய வம்சாவளி வீரர்கள் நால்வர் விளையாடுகின்றனர்.
தற்போதைய இந்தியச் சட்டப்படி இரட்டைக் குடியுரிமைக்கு அனுமதியில்லை என்பதால், வெளிநாட்டு வீரர்கள் இந்தியாவுக்காக விளையாட தங்கள் தற்போதைய குடியுரிமையைத் துறக்க வேண்டியுள்ளது.
அண்மையில் ரயன் வில்லியம்ஸ் என்ற வீரர் இந்தியக் காற்பந்து அணி சார்பில் விளையாடுவதற்காகத் தமது ஆஸ்திரேலியக் குடியுரிமையைக் கைவிட்டார். அந்தப் பிரச்சினைக்குத் தீர்வு[Ϟ]காணும் வகையில் ‘விளையாட்டுக் கடப்பிதழ்’ முன்மொழியப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
கத்தார், பஹ்ரேன், துருக்கி, ஸ்பெயின் போன்ற நாடுகள் தங்கள் தேசிய அணிகளின் நலனுக்காக இத்தகைய விளையாட்டுக் கடப்பிதழ்களை வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது.

