தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழக மீனவர்கள் 11 பேரை விடுவித்தது இலங்கை

1 mins read
94d560c1-0598-4fbd-9282-fe3849ed96de
இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட இந்திய அதிபர் நரேந்திர மோடி சனிக்கிழமை (ஏப்ரல் 5) இலங்கை அதிபர் அனுர திசாநாயக்காவுடன் பேச்சு நடத்தினார். - படம்: இபிஏ

கொழும்பு: மீனவர்கள் பிரச்சினையை மனிதாபிமான அணுகுமுறையுடன் தீர்வு காண இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டதை அடுத்து, ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 6) சிறப்பு நடவடிக்கையாக குறைந்தது 11 தமிழக மீனவர்களை இலங்கை விடுவித்துள்ளது.

இலங்கைக்குச் சுற்றுப்பயணம் சென்றுள்ள பிரதமர் மோடிக்கும், இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்கவுக்கும் சனிக்கிழமை (ஏப்ரல் 5) இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது மீனவர்கள் பிரச்சினை முக்கியமானதாக அமைந்தது.

“மீனவர்கள் வாழ்வாதாரம் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் நாங்கள் விவாதித்தோம். இந்த விஷயத்தில் மனிதாபிமான அணுகுமுறையுடன் செயல்பட இணங்கினோம்,” என்று இலங்கை அதிபரைச் சந்தித்த பின்னர் மோடி தெரிவித்தார்.

மீனவர்களையும் அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியதாக அவர் கூறினார்.

இந்தியா இலங்கை நாடுகளுக்கு இடையே மீனவர்கள் பிரச்சினை நீண்டகாலமாக நீடித்து வருகிறது. தமிழகத்துக்கும் இலங்கைக்கும் இடையில் இருக்கும் குறுகிய நீர்பரப்பான பாக் நீரிணையில் தமிழக மீனவர்கள் மீது இலங்கை ராணுவத்தினர் பலவந்தமாக தாக்குதல் நடத்துவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.

இதனிடையே, சனிக்கிழமை செய்தியாளர் சந்திப்பில் பேசிய மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, “மீனவர்கள் பிரச்சினையில் மனிதாபிமான, ஆக்கபூர்வமான அணுமுறை இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இது இருநாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் பிரச்சினை. இந்த விஷயத்தில் பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தைகளைத் தீவிரப்படுத்த வேண்டிய அவசியத்தைத் இருதரப்பும் வலியுறுத்தின,” என்று தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்