தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஒடிசா: உறுப்பு தானம் செய்தால் அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு

1 mins read
8e0af314-a2a5-4ed1-9c27-11fc24049da8
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக். - படம்: இந்திய ஊடகம்

புவனேஸ்வர்: உடலுறுப்பு தானம் செய்வோருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்குகள் செய்யப்படும் என்று இந்தியாவின் ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், “மூளைச்சாவு அடைந்தவர்களின் உறுப்புகளை அவர்களின் உறவினர்கள் தானம் செய்து, பல உயிர்களைக் காப்பாற்ற முன்வர வேண்டும்,” என்று கேட்டுக்கொண்டார்.

மேலும், நன்கொடையாளர்களின் துணிச்சலையும் தியாகத்தையும் கௌரவிப்பதே மாநில அரசின் நோக்கம் என்ற முதல்வர் நவீன், உடலுறுப்பு தானம் செய்பவர்களின் குடும்பத்துக்கு ஐந்து லட்ச ரூபாய் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், உறுப்பு தானம் செய்வோரின் உடல் மீது மூவண்ணக் கொடி போர்த்தி 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்படும் என்றும் அவர் சொன்னார்.

தமிழ்நாட்டில் உடலுறுப்பு தானம் செய்வோரின் உடல்கள் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்