தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வேலை நிறுத்தப் போராட்டத்தால் முடங்கிய மாநிலங்கள்

2 mins read
a96a26f7-e3fc-4588-a046-39f014cd4327
வேலை நிறுத்தம் காரணமாக தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டன. தமிழகத்தில் வேலை நிறுத்தத்துக்கு ஆளும் திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்திருந்தன.   - படம்: ஊடகம்

புதுடெல்லி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி, காப்பீடு, தபால் சேவைகள் முதல் நிலக்கரி சுரங்கம் வரை பல்வேறு துறைகளைச் சார்ந்த கோடிக்கணக்கான ஊழியர்கள் புதன்கிழமை (ஜூலை 9) நாடு தழுவிய அளவில் பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

பத்து மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டு மன்றத்தால் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

மத்திய அரசின், தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத, தேச விரோத பெரு நிறுவன சார்பு கொள்கைகளை எதிர்த்து போராட்டம் நடைபெற்றது.

பீகாரில் நடைபெற்ற முழுஅடைப்பு போராட்டத்துக்கு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தலைமையேற்றார்.

அவருடன் ராஷ்டிரிய ஜனதாதள கட்சித் தலைவரும், பீகார் எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ், அம்மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் கிருஷ்ணா, தலைவர் ராஜேஷ்குமார் ஆகியோரும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

முழுஅடைப்பு போராட்டத்தில் பங்கேற்ற பின்னர், அண்மையில் சுட்டுக்கொல்லப்பட்ட தொழில் அதிபரின் வீட்டுக்கும் ராகுல் காந்தி செல்வார் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

தமிழக நிலவரம்

வேலை நிறுத்தம் காரணமாக தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டன. தமிழகத்தில் வேலை நிறுத்தத்துக்கு ஆளும் திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்திருந்தன.

மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் உள்பட மற்ற கட்சிகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் உள்பட 13 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்திருந்ததாக ஊடகத் தகவல்கள் தெரிவித்தன.

வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படாது என்றும் போக்குவரத்து முடங்கக்கூடும் என்றும் தகவல்கள் வெளியாகின. எனினும், சென்னையில் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்பட்டன.

அதேவேளையில், கேரளாவுக்கான பேருந்து சேவைகள் பாதிக்கப்பட்டன. கன்னியாகுமரி, தென்காசியில் இருந்து கேரளாவுக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்துகள் ரத்தாகின. தமிழ்நாட்டிற்கு வழக்கமாக இயக்கப்படும் கேரளா அரசுப் பேருந்துகளும் இயக்கப்படவில்லை. இதனால் ஏராளமான பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

பிற மாநிலங்கள்

ஒடிசாவில் சிஐடியு தொழிற்சங்கத்தின் கோர்தா மாவட்டப் பிரிவு உறுப்பினர்கள் புவனேஸ்வர் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் மாணவர் அணியினர் ஜெஹனாபாத் ரயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட்டனர்.

கேரளாவில் பெரும்பாலான நகரங்களில் கடைகள் மூடப்பட்டிருந்ததாகவும் பல இடங்களில் மத்திய அரசைக் கண்டித்து கண்டனப் பேரணிகள் நடைபெற்றதாகவும் இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவித்தன.

எர்ணாகுளம் மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டதுடன், அரசுப் போக்குவரத்து, தனியார் வாகனங்கள் இயக்கப்படாததால் பொதுப் போக்குவரத்து முடங்கியது.

மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தில் புதன்கிழமை காலை முதலே சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

தமிழகத்தில் போக்குவரத்து பாதிக்கவில்லை: நாடு​தழு​விய வகை​யில் இன்று நடை​பெறும் பொது வேலை நிறுத்​தத்​துக்கு தமிழகத்​தில் பல்​வேறு தொழிற்​சங்​கங்​கள் ஆதரவு தெரி​வித்​துள்​ள​தால், அரசு சேவை​கள், வங்​கிப்​ பணி​கள் முடங்​கும் அபா​யம் ஏற்​பட்​டுள்​ளது. இந்​நிலை​யில், தமிழகத்​தில் பேருந்​துகள் வழக்​கம்போல் இயங்​கும் என அமைச்​சர் சிவசங்​கர் தெரி​வித்​துள்​ளார். அதன்படி போக்குவரத்தில் பெரிதாக பாதிப்பு ஏதுமில்லை.

தெலுங்கானா, புதுவையிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்