நூற்றுக்கணக்கில் கரை ஒதுங்கிய திமிங்கிலங்கள்

நூற்றுக்கணக்கில் கரை ஒதுங்கிய திமிங்கிலங்கள்

1 mins read
b8ac4f0a-0c6b-4aa3-8a90-beec819194ef
-

தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரன் பட்டினம் கடற்பகுதியில் ஏராள மான திமிங்கிலங்கள் கூட்டம் கூட்டமாக கரை ஒதுங்கியதால் அப்பகுதி மக்களிடையே பரபரப்பு நிலவி வருகிறது. இந்தோனீசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் காரண மாக திமிங்கிலங்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படு கிறது. எனினும் நிபுணர்கள் இதை உறுதி செய்யவில்லை.

நேற்று முன்தினம் மாலை சுமார் 4 மணியளவில் குலசேகரன் பட்டினம், கல்லாமொழி பதுவைநகர் கடற்கரையில் திடீரென கூட்டம் கூட்டமாக திமிங்கிலங்கள் கரை ஒதுங்கின. இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி மீனவர்களும் பொது மக்களும் கடற்கரையில் திரளாகத் திரண்டனர். கரை ஒதுங்கிய திமிங்கிலங் களை மீண்டும் கடலில் விட அவர்களில் பலர் முயற்சி மேற் கொண்டனர்.

எனினும் இடைவிடா மல் பல திமிங்கிலங்கள் கரை ஒதுங்கியபடி இருந்ததால் அனை வரும் திக்குமுக்காடிப் போயினர். இந்த இடைவெளியில் கரை ஒதுங்கிய முப்பது சிறு திமிங் கிலங்கள் அடுத்தடுத்து உயிரி ழந்தன. பெரிய திமிங்கிலங்கள் உயிருக்குப் போராடின.