பட்டம் விடும் திருவிழா: பொதுமக்கள் குதூகலம்

பட்டம் விடும் திருவிழா: பொதுமக்கள் குதூகலம்

1 mins read
fc1e89fe-0067-493e-883d-f1c015d3a614
-

வட மாநிலங்களில் பட்டம் விடும் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. புனே உட்பட பல்வேறு நகரங்களிலும் நரேந்திர மோடி, 'பாகுபலி' திரைப்படத்தின் படங்கள் கொண்ட பட்டங்களின் விற்பனை படு ஜோராக நடைபெற்றது. நரேந்திர மோடி, பாகுபலி, பேட்மேன், ஆங்கிரி பேர்ட், ஸ்பைடர் மேன் பட்டங்களும் குழந்தைகளை வெகுவாகக் கவர்ந்தன. பொங்கல் பண்டிகையை வட மாநிலங்களில் பட்டம் பறக்கவிட்டு கொண்டாடுகின்றனர்.

பெரியோர், சிறியோர், ஏழை, பணக்காரர் என்ற பாரபட்சமின்றி ஒற்றுமையை வெளிப்படுத்தும் விழாவாக இது கொண்டாடப்படுகிறது. வித்தியாசமான பட்டங்களை வாங்கிய பலர், தங்கள் மொட்டை மாடியில் நின்றபடி தம்படம் (செல்ஃபி) எடுத்து சமூக வலைதளங்களில் அவற்றைப் பதிவேற்றம் செய்து மகிழ்ந்தனர்.