ஒட்டகங்கள் பங்கேற்பு திடீர் ரத்து

ஒட்டகங்கள் பங்கேற்பு திடீர் ரத்து

1 mins read
118f534b-f4ca-4f6a-ab7e-81c9d1d68333
-

இந்தாண்டு குடியரசு தின விழாவில் ஒட்டக அணிவகுப்பு திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த 1950ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி நடைபெற்ற முதல் குடியரசு தின விழா அணிவகுப்பில் ராணுவ வீரர்கள் ஒட்டகங்களுடன் பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து ஆண்டுதோறும் குடியரசு தின விழாவில் ஒட்டகங்களின் அணிவகுப்பு தவறாமல் இடம்பெற்று வந்தது.

இந்நிலையில் இந்தாண்டு ஒட்ட கங்கள் பங்கேற்கவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்தாண்டுக்கான விழாவில் இந்திய வீரர்களுடன் பிரான்ஸ் ராணுவ வீரர்களும் பங்கேற்க உள்ளனர். பிரான்ஸ் அதிபர் பிரான்கோயிஸ் ஹோலன்ட் இந்தியக் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கவுள்ளார். படம்: ஏஎஃப்பி