மனைவியுடன் விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்ட குடிகார பயணி

1 mins read
d93deee3-38ca-4760-bee6-88145917ed3e
-

புதுடெல்லி: மது போதையில் மனைவியுடன் பயணம் மேற்கொண்ட வரை விமானத்தில் இருந்து இறக்கிவிட்டுள்ளது பிரபல தனியார் விமான நிறுவனம். மற்ற பயணிகளுக்கு அவரால் இடையூறு ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டே இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டதாக அந்நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

டெல்லி, மும்பை இடையே தினசரி விமான சேவையை வழங்கி வருகிறது பிரபல இண்டிகோ விமான நிறுவனம். நேற்று முன்தினம் மாலை அந்நிறுவனத்தின் விமானம் ஒன்று டெல்லியில் இருந்து மும்பைக்கு புறப்பட இருந்தது. அதில் ஒரு பயணி அதிக அளவு மது போதையுடன் இருந்தார். அவரது மனைவியும் உடன் இருந்துள்ளார்.

எனினும் அவரால் ஓரிரு வார்த்தைகள் கூட பேச முடியவில்லை.

இதைக் கவனித்த விமானப் பணியாளர்களில் ஒருவர், இதுகுறித்து உடனடியாக விமானியின் கவனத் திற்கு கொண்டு சென்றார். அவர் மூலமாக சம்பந்தப்பட்ட அதிகாரிக ளுக்கு தகவல் சென்றது. இதையடுத்து அந்தப் பயணி மனைவியுடன் சேர்த்து விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டார். எனினும் டெல்லியில் இருந்து இண்டிகோ நிறுவனத்தின் மற்றொரு விமானம் முலம் இத்தம்பதியர் நேற்று மதியம் மும்பை வந்தடைந்ததாக அந் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.