அவதூறு வழக்கு: நேரில் முன்னிலையாக டிராபிக் ராமசாமிக்கு அழைப்பாணை

அவதூறு வழக்கு: நேரில் முன்னிலையாக டிராபிக் ராமசாமிக்கு அழைப்பாணை

1 mins read
818d3bb4-ed96-430e-90e3-e9d98c9c4db9
-

சென்னை: முதல்வர் ஜெயலலிதா சார்பில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மீது மாநகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் எம்.எல்.ஜெகன், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். அதில், முதல்வர் ஜெயலலிதா பற்றி டிராபிக் ராமசாமி அவதூறாகப் பேசியது வீடியோ பதிவாக வாட்ஸ்-அப் மூலம் வெளிவந்துள்ளது. இந்தப் பதிவை உளவுத்துறை போலிசார் சேகரித்துள்ளனர்.

அதில், வெள்ள பாதிப்பு சம்பவம் குறித்து முதல்வரை அவதூறாகப் பேசியுள்ளார். அவரது பேச்சு, முதல்வரின் நற்பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. எனவே, அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறப்பட்டிருந்தது. இதுகுறித்து விளக்கம் அளிக்க பிப்ரவரி 22ஆ-ம் தேதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு டிராபிக் ராமசாமிக்கு முதன்மை அமர்வு நீதிபதி ஆதிநாதன் அழைப்பாணை அனுப்ப உத்தரவிட்டார்.