பரிசீலனையில் திருவரங்கம், ஆர்.கே.நகர், திருப்போரூர் தொகுதிகள்

பரிசீலனையில் திருவரங்கம், ஆர்.கே.நகர், திருப்போரூர் தொகுதிகள்

1 mins read
f6b328c1-ad99-4d8c-9a15-2d65948c6fe5
-

சென்னை: விரைவில் வரவிருக் கும் சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா போட்டியிட வாய்ப்புள்ளதாக வெளியான தகவல் அதிமுக வட்டா ரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அண்மைக்காலமாக சசி கலாவை மையப்படுத்தி பல ஆருடத் தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. அவருக்கு அதிமுகவில் முக்கிய பதவி வழங்கப்படும் என்றும் அநேக மாக அவர் அதிமுக துணைப் பொதுச்செயலராகப் பொறுப் பேற்க வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டது.

எனினும், அதற்கான அறி குறிகள் எதுவும் இதுவரை தென்படவில்லை. இந்நிலையில் அவர் தேர்தலில் போட்டியிட வேண்டுமென அவருக்கு நெருக்கமான உறவினர்கள் வற்புறுத்தி வருவதாகத் தெரிகி றது. ஜெயலலிதா அரசியல் வாழ் வின் தொடக்கம் முதற்கொண்டு அவருடன் இணைந்து வந்துள் ளார் சசிகலா. அவரது உறவி னர்கள் பலரும் அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித் துள்ளனர்.