பெரும் கூட்டணிக்குத் தயாராகும் திமுக

பெரும் கூட்டணிக்குத் தயாராகும் திமுக

1 mins read
05802587-c8fa-4af8-a492-101d8977ebe8
-

தமி­ழ­க சட்­ட­மன்றத் தேர்­த­லில் அதி­மு­க­வுக்கு பலத்த போட்­டி யைத் தரும் வகையில் பெரும் கூட்­ட­ணியை அமைக்க திமுக திட்­ட­மிட்­டி­ருப்­பதை அக்­கட்­சி­யின் தலைவர் மு.கரு­ணா­நிதி நேற்றுக் கோடி­காட்­டி­யுள்­ளார். "தேர்­த­லில் கூட்டணி என்பது வெறுக்­கத்­தக்­கது அல்ல; வர வேற்­கத்­தக்­கது," என்ற அவர், தமிழ்­நாட்­டில் ஜன­நா­ய­கத்­தின் வெற்­றி­யில் ஆர்­வ­முள்ள கட்­சி­களை திமுக வர­வேற்­கும் என்றார். தமது சொந்த ஊரான திரு­வா­ரூ­ருக்கு நேற்றுச் சென்ற அவர் காட்­டூ­ரில் உள்ள தமது தாயார் நினை­வி­டத்­தில் அஞ்சலி செலுத்­தினார்.

பின்னர் செய்­தி­யா­ளர்­களி­டம் பேசி­ய­போது, 2016 தேர்­த­லில் திமுக.வுக்கு வெற்றி வாய்ப்பு பிர­கா­ச­மாக உள்ளது. ஜன­நா­ய­கத்தை முன்­னிலைப்­படுத்தி தேர்தல் அறிக்கை வெளி­யி­டு­வோம்," என் றார். மக்கள் விரும்பினால் திரு வாரூரில் இந்த ஆண்டில் போட்டி யிட ஆர்வமுள்ளதாகவும் 93 வயது கருணாநிதி கூறினார். அண்மை­யில் திமுக = காங்­கி­ரஸ் கூட்­ட­ணிக்கு கரு­ணா ­நிதி அழைப்பு விடுத்­தார். மாநில காங்­கி­ரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்­கோ­வன் அவர் அழைப்­புக்கு ஆதரவு தெரி­வித்­தார்.