ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு; விசாரணை ஒத்திவைப்பு

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு; விசாரணை ஒத்திவைப்பு

1 mins read
c52926d0-8b7d-4c31-839e-5863fbc22bd2
-

புதுடெல்லி: ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் இறுதி விசாரணை வரும் பிப்ரவரி 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கர்நாடக அரசு, ஜெயலலிதா தரப்பு கோரிக்கையை ஏற்று பிப்ர வரி 2ஆம் தேதி விசாரிக்கப்பட இருந்த இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. நீதிபதி பினாகி சந்திரகோஸ் அமர்வு இந்த உத்தரவைப் பிறப் பித்துள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் பினாகி சந்திரகோஷ், அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இறுதி விசாரணை பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி முதல் நடைபெறும் என்று உச்ச நீதி மன்றம் அறிவித்திருந்தது.

மேலும் மனுதாரர்கள் 2ஆம் தேதிக்கு முன்பாகவே, தங்களது பதில்களை அளிக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தர விட்டிருந்தது. இந்நிலையில் கர் நாடக அரசும் ஜெயலலிதா தரப்பும் கால அவகாசம் கேட்டுக் கோரிக் கை விடுத்திருந்தது. இதை ஏற்று பிப்ரவரி 2ஆம் தேதி விசாரிக்கப்பட இருந்த சொத்துக் குவிப்பு மேல் முறையீட்டு வழக்கு பிப்ரவரி 23ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப் படுவதாக தெரிவிக்கப்பட்டது. அடுத்த நாள் பிப்ரவரி 24ஆம் ஜெயலலிதாவின் பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.