விண்ணப்பித்த நான்கே நாட்களில் பாஸ்போர்ட்

1 mins read
f8cea8ee-4f9c-404c-886f-2416be214b8a
-

போலிஸ் விசாரணையின்றி பாஸ்போர்ட் வழங்கும் முறை இந்தியா முழுவதும் கடந்த புதன்கிழமை நடப்புக்கு வந்தது. இது குறித்து நேற்று முன்தினம் விவரித்த மதுரை மண்டல பாஸ் போர்ட் அதிகாரி எஸ். மணீஸ்வர ராஜா, "ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, நிரந்தரக் கணக்கு எண் (பான்) அட்டை ஆகியவற்றைச் சமர்ப்பித்தால் நான்கு வேலை நாட்களுக்குள் பாஸ்போர்ட் வழங் கப்படும்," என்றார்.

இந்த மூன்று அடையாளச் சான்றுகளுடன் தம் மீது எவ்விதக் குற்ற நடவடிக்கைகளும் இல்லை என்பதை உறுதிகூறும் பிரமாணப் பத்திரம் ஒன்றையும் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் பின்னர் நடக் கும் போலிஸ் விசாரணையின் போது இந்த உறுதிக்கு மாறான தகவல் பெறப்பட்டால் உடனடியாக பாஸ்போர்ட் மீட்டுக்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.