துப்பாக்கி வைத்திருந்த விமானப் பயணி கைது

துப்பாக்கி வைத்திருந்த விமானப் பயணி கைது

1 mins read
afe2e368-ff9f-445d-802b-5ad6156f6489
-

மதுரை: விமான நிலையத்தில் பயணி ஒருவரிடம் இருந்து துப்பாக்கியும் தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டதால் மதுரையில் பரபரப்பு நிலவியது. ஜூலியஸ்டன் என்ற அப் பயணி சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்தி ருந்தார். அவரது உடைமைகளைச் சோதனையிட்டபோது, அமெரிக் கத் தயாரிப்பு கைத்துப்பாக்கியும் ஆறு தோட்டாக்களும் இருந்தன.

விசாரணையில் அது தனது தந்தை திருகுடும்பனுக்கு சொந்த மான துப்பாக்கி என அவர் கூறி னார். திருகுடும்பனிடம் துப்பாக்கி உரிமத்துக்கான ஆவணங்கள் ஏதுமில்லை. இதையடுத்து தந்தை யும் மகனும் கைதாகினர்.