காரைக்கால்: அரசு அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி சோதனை நடவடிக்கையின்போது காரைக்குடியில் 3,600 கிலோ கலப்பட டீத்தூள் பறிமுதல் செய்யப்பட்டது. நேற்று முன்தினம் கலப்பட டீத்தூள் விற்கப்படுவதாகக் கிடைத்த தகவலையடுத்து பெரியார் நகரில் உள்ள ரவிக்குமார் என்பவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது அங்கு 3,600 கிலோ போலி டீத்தூள் இருப்பது தெரியவந்தது. மேலும் கலப்பட டீத்தூள் தயாரிப்பதற்காக அவர் பதுக்கி வைத்திருந்த 500 கிலோவுக்கும் அதிகமான வண்ணப் பொடி, மரத்தூள், 10 கிலோ காபித் தூள் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
3,600 கிலோ கலப்பட டீத்தூள் பறிமுதல்
1 mins read
-

